உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் நலம் பெற அம்மனுக்கு பாலாபிஷேகம்

முதல்வர் நலம் பெற அம்மனுக்கு பாலாபிஷேகம்

சேந்தமங்கலம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா, குணமடைய வேண்டி, சேந்தமங்கலம் பேரூர், அ.தி.மு.க., சார்பில், பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பால்குட அபிஷேகம், பூஜைகள் நடந்தன. எம்.எல்.ஏ., சந்திரசேகரன் தலைமை வகித்தார். பெருமாள் கோவிலில் இருந்து, 1,500க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக பெரிய மாரியம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு, பால் அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பேரூர் செயலாளர் ராஜேந்திரன், டவுன் பஞ்., துணை தலைவர் ரமேஷ், நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !