உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன், முனியப்பன் கோவில் பொங்கல் விழா

மாரியம்மன், முனியப்பன் கோவில் பொங்கல் விழா

பெருந்துறை: பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோட்டை மாரியம்மன், முனியப்பன் கோவில்களில் பொங்கல் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. திருவிழா நாளில், மாரியம்மன் மற்றும் முனியப்பன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பெருந்துறை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பஸ் ஸ்டாண்டை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெருந்துறை கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் மாலையில் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !