பிடாரியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
ADDED :3314 days ago
சென்னிமலை: பிடாரியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு, அம்மனை வழிபட்டனர். சென்னிமலை அடுத்த, முகாசிபிடாரியூரில், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 4ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 11ல் கம்பம் நட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று பொங்கல் விழாவில், பக்தர்கள் காலை முதல், பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலிகொடுத்தும் அம்மனை வழிபட்டனர். இன்று மஞ்சள்நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.