சிவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3313 days ago
தாண்டிக்குடி, தாண்டிக்குடி அருகே பாச்சலுார் சிவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜையில் தீப வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதற்கால யாக வேள்வி, பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. இரண்டாம் கால பூஜை நாடி சந்தானத்திற்குப்பின், கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.