மூன்று மயில்கள்!
ADDED :3672 days ago
கந்தனுக்கு வாகனம் அழகான நீல மயில். வேதமே மயிலாக மாறியது. (வேதமேவ மயூரஸ்யாத்). சூரசம்ஹாரத்திற்கு இந்திரனே மயிலாகி முருகனுக்கு வாகனமாக வந்தான். அதுபோல முருகனால் இருகூறாக்கப்பட்ட சூரனின் ஒருபாதி மயில் வாகனமாகியது. பல கோயில்களில் கருவறையில் முருகன் மயில்மீது வீற்றிருக்கும் கோலத்தை தரிசிக்கலாம். முருகனது வலக்கைப்பக்கம் மயிலின் முகம் இருந்தால் அது சூரன் மாறின மயில். முருகனது இடக்கைப்பக்கம் மயிலின் முகம் இருந்தால் அது இந்திரன் மாறின மயில். மயில் நடுவாக நம்மை நோக்கியிருந்தால் அது வேதமயில் - பிரணவ மயில்.