முதல்வர் ஜெ., பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை
ADDED :3295 days ago
காட்டுமன்னார்கோவில்: தமிழக முதல்வர் ஜெ., பூரண நலம் பெற வேண்டி காட்டுமன்னார்கோவில் குருசேகரம் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை துாய சிலுவை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அ.தி.மு.க., சார்பில் சார்பில் நடந்த பிரார்த்தனைக்கு காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் பாலமுருகன், நகர செயலர் எம்ஜிஆர் தாசன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்கள் எம்.பி.,க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் ஆகியோர் மண்டியிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.