வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :3463 days ago
சிறுபாக்கம்: முதல்வர் ஜெ., குணமடைய வேண்டி, மங்களூர் வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மங்களூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அருண்மொழிதேவன் எம்.பி., தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் கந்தசாமி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் குமார், பேரூராட்சி சேர்மன் நீதிமன்னன், ஊராட்சித் தலைவர் அன்பரசு, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.