சன்னிதியில் கண்ணை மூடிக் கொண்டு வணங்கக் கூடாதாமே! ஏன்?
ADDED :3308 days ago
சன்னிதியில் நின்று சுவாமியை தரிசிப்பது சில மணித்துளிகள் தானே. அந்த நேரத்திலும் கண்ணை மூடிக் கொண்டு நின்றால் எப்படி கடவுளைக் கண்ணாரக் காண முடியும். சிதம்பரம் கோவிலுக்கு சுந்தரர் வரும் போது, நடராஜப்பெருமானின் ஆனந்தக் கூத்தினைக் காண்கிறார். கண்களை இமைக்காமல் அப்படியே மெய் மறந்து நின்று விட்டார். இக்காட்சியை சேக்கிழார் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள எனத் துவங்கி தனிப்பெரும் கூத்தினைக் கண்டு மகிழ்ந்தார் எனப் பாடி முடிக்கிறார். எனவே சன்னிதியில் நிற்கும்போது கண் மூடி நிற்காமல், தரிசனம் முடித்தபின், கொடிமரம் அருகில் அமர்ந்து சிறிது நேரம் கண் மூடி தியானம் செய்ய வேண்டும்.