உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல வழியில் செல்லுங்கள்!

நல்ல வழியில் செல்லுங்கள்!

நல்லது எது, கெட்டது எது என்பது பற்றி சொல்கிறார் நபிகள் நாயகம். ஒருமுறை நாயகத்தின் நண்பர் ஒருவர் திடகாத்திரமான உடலுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மற்ற நண்பர்கள் நாயகத்திடம், “அண்ணலாரே! இவர் இவ்வளவு உடல்பலம் மிக்கவராக இருக்கிறார்.இந்த பலத்தை மட்டும் இவர் நல்ல வழியில் பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்றனர். அதற்கு நாயகம், “தோழர்களே! அவர் தம் பச்சிளங் குழந்தையின் தேவைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது நல்லவழி. பெற்றோர்களின் பணிவிடைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது நல்லவழி. வயது முதிர்ந்த பெற்றோர்களின் பணிவிடைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது சீரியவழி. நெறி கெட்ட வழியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சென்று கொண்டிருக்கிறார் என்றால் அதுவும் நல்லவழி. ஆனால், பெருமைக்காகவும், புகழுக்காகவும் சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது ஷைத்தானின் வழியாகும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !