சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் பூச நட்சத்திர வழிபாடு!
ADDED :3292 days ago
திருப்பூர் : திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், பூச நட்சத்திர வழிபாடு மற்றும் மங்கை பாரதி மையம் தயாரித்த, தகவல் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. தலைவர் சித்ரா ராமசாமி தலைமை வகித்தார். கந்தசாமி முன்னிலை வகித்தார். திருவருட்பா அகவல் பாராயணம் மற்றும் ஒளி வழிபாடு நடைபெற்றது. தகவல் தொகுப்பை, செயலாளர் நீறணி பவளக்குன்றன் வெளியிட, இயற்கை வாழ்வகம் நிர்வாகி முத்துசாமி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.