உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் தூய்மை பணி

சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் தூய்மை பணி

புதுச்சேரி: சத்ய சாய் சேவா நிறுவன புதுச்சேரி கிளை சார்பில், அஜிஸ் நகர் இடுகாட்டில் துப்புரவு பணி மேற்கொள்ளப் பட்டது. ’துாய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அஜிஸ் நகர் இடுகாட்டை துாய்மைப் படுத்தும் பணியில், சத்ய சாய் சேவா நிறுவனத்தினர் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் நரசிம்மன் தலைமையில், சுந்தரம், ஐயப்பன், சிவசுப்ரமணியன், சோமசுந்தரம், மூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டாளர்களாக செயல்பட்டனர். சத்ய சேவா நிறுவன பேரிடர் பிரிவு இளைஞர்கள் உட்பட 32 பேர், இடுகாட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !