சதுரங்கப்பட்டினத்தில் திடீர் கோவில்
                              ADDED :3293 days ago 
                            
                          
                          சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் உருவான திடீர் கோவிலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சதுரங்கப்பட்டினத்தில், பக்கிங்ஹாம் கால்வாய் அருகில், ஊராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகம் இயங்குகிறது. அதை ஒட்டிய அரசு புறம்போக்கு நிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன், யாரோ சிலர், அவசர கோலத்தில், சிறிய கோவில் அமைத்து, அங்காள பரமேஸ்வரி சிலையை பிரதிஷ்டை செய்தனர். அப்பகுதியில் துர்நாற்றம் நிலவும் நிலையில், அங்கே கோவில் உருவானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; எனினும், கோவிலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.