சீனிவாசபெருமாள் கோவில் வைஷ்ணவ மாநாடு
ADDED :3295 days ago
உடுமலை: உடுமலை சீனிவாசபெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ கூரேசர் கைங்கர்ய சபை சார்பில், ஸ்ரீ ராமானுஜரின், ஆயிரமாவது திருநட்சத்திர வைபவம் மற்றும் வைஷ்ணவ மாநாடு, உடுமலை நாடார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பக்தர்கள், திரளாக கலந்து கெ ாண்டனர். அதில், திருவாய் மொழிசேவை, திவ்யபிரபந்த பஜனை, உபன்யாசங்கள், சுதர்சன ேஹாமம், பஞ்ச சமஸ்காரம், வைபவம், நாமகீர்த்தனம் மற்றும் மாணவியரின் கலைநிகழ்ச்சி ஆகியவை இடம்பெற்றது. ஐஸ்வர்யலட்சுமி, ஸ்னிக்தா, தீப்தி, பூஜா ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.