உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் சிவகாமசுந்தரி கோவிலில் ஐப்பசி பூர தேர் திருவிழா!

சிதம்பரம் சிவகாமசுந்தரி கோவிலில் ஐப்பசி பூர தேர் திருவிழா!

சிதம்பரம்: நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி கோவில் ஐப்பசி பூரம் திருவிழாவில் நேற்று தேர் திருவிழா நடந்தது. ஐப்பசி பூரம் திருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை தொடர்ந்து தினமும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. நேற்று 9ம் நாள் உற்சவமான தேர் திருவிழா நடந்தது. அதனையொட்டி அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சிவகாமசுந்தரி அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 8:00 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (26ம் தேதி) சிவகாமி சிற்சபைக்கு சென்று நடராஜரிடம் பட்டு வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பிரகாரங்களில் உள்ள சுவாமிகளிடம் பட்டு வாங்கப்படும். நிறைவு நாளான நாளை (27ம் தேதி) தேவசபையில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !