விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 31 முதல் கந்தர் சஷ்டி விழா
ADDED :3298 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கந்தர் சஷ்டி விழா, வரும் 31ம் தேதி முதல் துவங்குகிறது. வரும் நவம்பர் 5ம் தேதி கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வரும் 31ம் தேதி முதல் மகா கந்தர் சஷ்டி விழா துவங்குகிறது. கோவிலில் உள்ள சண்முக சுப்ரமணியர் சுவாமி, 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நவம்பர் 5ம் தேதி கந்தர் சஷ்டி அன்று இரவு 7:30 மணியளவில் சண்முக சுப்ரமணியர் சுவாமி, விருத்தாம்பிகை அம்மனிடம் சக்தி வேல் வாங்கி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.