அனந்தபுரம் கோவிலில் தன்வந்திரி ஹோமம்
செஞ்சி: முதல்வர் ஜெ., நலம்பெற வேண்டி, அனந்தபுரம் நகர அ.தி.மு.க., சார்பில் தன்வந்திரி ஹோமம் நடந்தது. தமிழக முதல்வர் ஜெ., பூரண நலம் பெற வேண்டி, அனந்தபுரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. கடை வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்தரி ஹோமம் நடந்தது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர், எம்.பி., டாக்டர் லட்சுமணன் தலைமை தாங்கினார். விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன், மாணவரணி மாவட்ட செயலாளர் ராமசரவணன், மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், நிர்வாகி சரவணபெருமாள், செஞ்சி ஒன்றிய செயலர் கோவிந்தசாமி, நகர அவைத்தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் கருணாநிதி, முன்னாள் தலைவர் கோபால், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சிவா, வார்டு செயலாளர்கள் ஏழுமலை, சக்கரை, மோகன், சுதா, மாரிமுத்து, சரவணன், கார்த்திக், நாட்டார் சின்னய்யா, சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.