உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் மிருத்யுஞ்சய ஹோமம்

கைலாசநாதர் கோவிலில் மிருத்யுஞ்சய ஹோமம்

விழுப்புரம்: முதல்வர் ஜெ., பூரண குணமடைய வேண்டி, விழுப்புரம் நகர அ.தி.மு.க., சார்பில் சிறப்பு ஹோமம் நடந்தது. விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் முதல்வர் ஜெ., பூரண குணமடைய வேண்டி, நகர அ.தி.மு.க., சார்பில் மிருத்யுஞ்சய மற்றும் ஆயுஷ் ஹோமம் நடந்தது. அ.தி.மு.க., நகர செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் செந்தில், எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் தனுசு, இணை செயலாளர் ஜானகிராமன், நகர கூட்டுறவு அச்சக சங்க தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் லாலா ராதாகிருஷ்ணன், வேங்கடபதி, அபிராமன், கமருனிசா சண்முகம், ரவிசக்திவேல், மாவட்ட பிரதிநிதி கீதாரத்தினம், வார்டு செயலாளர்கள் தெய்வகருணாகரன், செல்வாரமேஷ், ஷாஜகான், அன்பு, சேகர், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால், கலுவு, முத்துக்குமரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !