பருத்திக்காட்டு வலசை பட்டமடையான் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :6 hours ago
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் அருகே பத்திராதரவை ஊராட்சியில் உள்ள பருத்திக்காட்டு வலசையில் கும்பாபிஷேகம் நடந்தது. பருத்திக்காட்டு வலசையில் உள்ள பட்டமடையான் காளியம்மன், கருப்பண்ணசாமி, மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். முன்னதாக யாகசாலையில் வேள்வி பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பத்திராதரவை மற்றும் பருத்திக்காட்டு வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.