லட்சுமிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3303 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம் லக்ஷ?மிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும் டிசம்பரில் நடைபெறும் என, செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் கூறியிருப்பதாவது: குமாரபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட லக்ஷ?மிநாராயண சுவாமி, ஆஞ்சேநேயர் சுவாமி, காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன் கோவில்களின் புனரமைப்பு பணிகள், ஓராண்டுக்கும் மேலாக நடக்கின்றன. இக்கோவில்களின் கும்பாபிஷேகம், வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. குமாரபாளையம் இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட எந்த கோவில்களிலும், அறங்காவலர் குழுவினர் இதுவரை நியமிக்கப்படவில்லை. கோவில்களின் வழக்கமான பணிகள், அந்தந்த கோவில் அர்ச்சகர் சார்பில் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.