முதல்வர் உடல்நலம்: மாரியம்மன் கோவிலில் பூஜை
ADDED :3303 days ago
நாமக்கல்: அ.தி.மு.க., இலக்கிய அணி சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பூரண குணம் அடைய வேண்டி, நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை வகித்தார். சுவாமிக்கு, மஞ்சள், குங்குமம், திருநீறு, சந்தனம், பால், தயிர் போன்ற பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.