உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவிலில் முதல்வர் ஜெ., நலம்பெற வேள்வி

சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவிலில் முதல்வர் ஜெ., நலம்பெற வேள்வி

விக்கிரவாண்டி: முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி, விக்கிரவாண்டி ஒன்றியம், சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சிந்தாமணி நல்லுார் தையல் நாயகி உடனுறை வைத்தீஸ்வரன் கோவிலில் நடந்த சிறப்பு வேள்விக்கு அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் லட்சுமணன், விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஜெ., நலம்பெற வேண்டி கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் , ஆயுள் ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடந்தது. பின்னர், வைத்தீஸ்வரன், தையல்நாயகிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஒன்றிய செயலாளர் சிந்தாமணி வேலு, மாவட்ட சேர்மன் அலமேலு வேலு, ஒன்றிய சேர்மன் சுமதிநாகப்பன், துணை சேர்மன் வித்யா முகுந்தன், தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, மாநில பொதுக்குழு பன்னீர், ஒன்றிய பேரவை செயலாளர் சரவணக்குமார், தொரவி சுப்பிரமணி, மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், மாணவரணி செயலாளர் ராமசரவணன், குமாரராஜா, லட்சுமி நாராயணன், சந்திரன், புருஷோத்தமன், கோபாலகிருஷ்ணன், ராஜவேல், திருப்பதி பாலாஜி, மருத்துவரணி கலைச்செல்வம், வங்கி துணை தலைவர் வேலுமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் சிந்தாமணி வேலு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !