உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெகன்னாதீஸ்வரர் கோவிலில் முதல்வர் ஜெ.,விற்காக யாகம்

ஜெகன்னாதீஸ்வரர் கோவிலில் முதல்வர் ஜெ.,விற்காக யாகம்

விழுப்புரம்: முதல்வர் ஜெ., உடல் நலம் பெற வேண்டி, வளவனுார் கோவிலில் ஆயுசு யாகம், மிருத்யுஞ்சய யாகம் நடந்தது. வளவனுார் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகன்னாதீஸ்வரர் கோவிலில் நடந்த ஆயுசு யாகம், மிருத்யுஞ்சய யாகத்தை, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.பி., தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். விழுப்புரம் எம்.பி.,ராஜேந்திரன், வளவனுார் நகர செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் நகர செயலாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், மாணவரணி ராமசரவணன், மருத்துவரணி கலைச்செல்வன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் காசிநாதன், அவை தலைவர் அண்ணாமலை, நகர இலக்கிய அணி செயலாளர் திருப்பதி பாலாஜி, நிர்வாகிகள் பாவாடைசாமி, குமார், செந்தில், முருகையன், சுதர்சனம், பரந்தாமன், லட்சுமணன், தமிழ்செல்வி, துரை, செந்தில், மூர்த்தி, பஞ்சாட்சரம், சேகர், கலியபெருமாள், பன்னீர்செல்வம், நாகராஜ், சுப்ரமணி, பச்சையப்பன், பூபதி, மணி, முருகன், சுப்ரமணி, பிரபாகரன், சரவணன், சகாபுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !