முதல்வர் நலம் பெற கோவிலில் யாகம்
ADDED :3304 days ago
அரூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், அரூர் எம்.எல்.ஏ., முருகன் தலைமையில், நேற்று சிறப்பு யாகம் நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட பேரவை செயலாளர் தென்னரசு உட்பட பலர் பங்கேற்றனர். பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தின் சார்பில், பூனையானூர் ஈஸ்வரன் கோவிலில், ஒன்றிய செயலாளர் கௌதமன் தலைமையில், சிறப்பு யாகம் நடந்தது. இதில், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, பஞ்., செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.