உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர திருவிழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர திருவிழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர திருவிழாவை முன்னிட்டு, உற்சவர் சன்னதியில் தெய்வானை மட்டும் எழுந்தருளினார். அம்பாள் முன், வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி, பூஜை நடந்தது.

அரிசி, நெல், வெல்லம், வெற்றிலை, பாக்கு, கருகமணி, வேப்பிலை, மஞ்சள் கிழங்கு, வளையல், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது. படிகளில் வைக்கப்பட்டிருந்து நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள் முன் மூன்று முறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனிதநீர் அபி ஷேகம் நடந்தது. தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !