உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் நாராயணி பீடத்தில் 10,008 நெய் தீபத்தில் சிறப்பு பூஜை

வேலூர் நாராயணி பீடத்தில் 10,008 நெய் தீபத்தில் சிறப்பு பூஜை

வேலூர்: வேலூர் நாராயணி பீடத்தில், 10,008 நெய் தீபத்தில் ஸ்ரீசக்கரம் அமைத்து சிறப்பு பூஜை நடந்தது. வேலூர் அருகே, திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், உலக அமைதிக்காகவும், இயற்கை வளத்திற்காகவும், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, 10,008 நெய் தீபத்தில் ஸ்ரீசக்கரம் அமைத்து, சிறப்பு பூஜை நடந்தது. சக்தி அம்மா தலைமையில் நடந்த சிறப்பு பூஜையில், நாராயணி ஊஞ்சல் சேவை நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், வேலூர் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், முன்னாள் அணைக்கட்டு எம்.எல்.ஏ., கலையரசு, நாராயணி அறங்காவலர் குழு தலைவர் சவுந்தரராஜன், நாராயணி பீடம் மேலாளர் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர். பின், சக்தி அம்மா பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !