உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி தர்காவில் சந்தனக் கூடு திருவிழா

பண்ருட்டி தர்காவில் சந்தனக் கூடு திருவிழா

பண்ருட்டி: பண்ருட்டி ஹஜரத் நுார் முகமது அவுலியா தர்கா சந்தன கூடு திருவிழா நடந்தது.  பண்ருட்டி ஹஜரத் நுார்முகம்மது அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் பண்டிகை கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் 29 ம் தேதி மாலை அவுலியா அவர்களின் ரவுலா ஷரிப் பீடத்தை பூ போர்வையால் அலங்கரித்து இரவு 12:00 மணிக்கு மேல் ரவுலா ஷரிபு சமாதிக்கு சந்தனம் அணிவித்து ஐாய்னிஷனால் சந்தன கலசம் கூண்டிலேற்றப்பட்டு, பேண்டு வாத்தியம் முழங்க சந்தன கூடு  ஊர்வலம் நடைபெற்றது. நேற்று மாலை 6:00 மணிக்கு சீரியல் விளக்கு அமைத்து, விளக்கு பண்டிகை மற்றும் இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று 31 ம் தேதி தர்காவில் குர்ஆன் ஷரிப் ஓதி, துவா செய்தலும், நாளை 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை தர்காவில் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !