உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேற்றும் தீபாவளி கொண்டாட்டம்

நேற்றும் தீபாவளி கொண்டாட்டம்

திருப்பூர் : திருப்பூரில் வசிக்கும் வடமாநிலத்தவர், நேற்று பட்டாசு வெடித்து, தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். வட மாநிலங்களில், தீபாவளிக்கு அடுத்த நாள், அப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருப்பூர் நகரப்பகுதியில் பீகார், ஒடிசா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் அதிகம் பேர் வசிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வரும் இவர்கள், நேற்று புத்தாடை அணிந்து, வீடுகளையும், கடைகளையும் அலங்கரித்து, தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். மாலை நேரத்தில், பட்டாசுகளை வெடித்தும், வான வேடிக்கைகளை நிகழ்த்தியும், பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். நண்பர்களுக்கு இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !