ஐப்பசி அமாவாசையை ஒட்டி அங்காளம்மன் திரு வீதி உலா
ADDED :3300 days ago
தர்மபுரி: ஐப்பசி அமாவாசையையொட்டி, தர்மபுரியில் அங்காளம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, தர்மபுரி அங்காளம்மன் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து, அம்மன் திருவீதி உலா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எஸ்.வி., ரோடு, கடை வீதி, காளியப்பட்ட செட்டி தெரு வழியாக சென்று மீண்டும் கோவிலை தேர் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.