இஸ்கான் கோவிலில் கோவர்த்தன பூஜை: அன்னக்கூட மலைக்கு பக்தர்கள் ஆராதனை!
ADDED :3299 days ago
கோவை: இஸ்கான் கோவிலில் நடந்த கோவர்த்தன பூஜையில், உணவு பதார்த்தங்களால் உருவாக்கப்பட்ட அன்னக்கூட மலைக்கு பக்தர்கள் நெய் விளக்கு ஆராதனை செய்தனர். கோவை, பீளமேடு, இஸ்கான் கோவிலில் கோவர்த்தன பூஜை நடந்து வருகிறது. பகவான் கிருஷ்ணர் நிகழ்த்திய கோவர்த்தன லீலைகளை நினைவு கூரும் வகையில், இந்த விழா கொண்டாடப் படுகிறது. நேற்று நடந்த விழாவில், உணவுப் பதார்த்தங்களால் அன்னக்கூட மலை உருவாக்கப்பட்டது. துளசி ஆரத்தி, அரிசி சாதம், கேசரி, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு விதமான உணவு பதார்த்தங்களை கொண்டு அமைக்கப்பட்ட அன்னக்கூட மலைக்கு சிறப்பு ஆராதனை நடந்தது; பக்தர்கள் நெய்விளக்கு ஆராதனை செய்தனர். கோவர்த்தன லீலைகள் குறித்து, கோவை இஸ்கான் செயலாளர் சீனிவாச ஹரிதாசன் சொற்பொழிவாற்றினார்.