வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
ADDED :3300 days ago
வல்லக்கோட்டை:வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளான நேற்று, மூன்று கால வேலை தீப ஆராதனை நடந்தது. உற்சவர் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதை தொடர்ந்து வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் மூலவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும், சனிக்கிழமை மாலை, 5:00 மணிக்கு சூரசம்ஹரமும், ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.