செத்தவரை கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :3299 days ago
செஞ்சி: செத்தவரை மோன சித்தர் ஆசிரம மீனாட்சி அம்மன் உடனாகிய சொக்கநாத பெருமான் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி தாலுகா செத்தவரை கிராமத்தில் உள்ள ஸ்ரீசிவஜோதி மோனசித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத பெருமான் கோவிலில், நேற்று முன்தினம் மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு மாலையில், பிரதோஷ நாயகர் நந்தி பெருமானுக்கும், சொக்கநாதர், மீனாட்சியம்மன் மற்றும் உற்சவர்களுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. சிவ வாத்தியங்கள் முழங்க நந்தி பெருமானுக்கு ஸ்ரீசிவ ஜோதி மோன சித்தர் மகா தீபாராதனை செய்தார். தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு தீபாராதனை நடந்தது. பின்னர், நந்தி வாகனத்தில் மீனாட்சி, சொக்கநாதர் கோவில் உலா நடந்தது.