உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்த குருநாதர்கள்

சப்த குருநாதர்கள்

திருச்சியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் உத்தமர் கோயில் மும்மூர்த்தி திருத்தலம் என்று போற்றப்படுகிறது. மேலும் சப்த குருநாதர் தலம் என்றும் சொல்லப்படுகிறது. தேவகுருவான பிரகஸ்பதி, அசுர குருவான சுக்கிராச்சாரியார், தந்தைக்கு உபதேசம் செய்த ஞானகுரு முருகப் பெருமான், பரப்பிரம்ம  குரு பிரம்ம தேவர், விஷ்ணு குரு வரதராஜப் பெருமாள், சக்தி குரு சவுந்தர்ய நாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி ஆகியோர்தான் அந்த சப்தகுருக்கள். இந்த சப்த குருநாதர்களை ஒரேசமயத்தில் வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும். கல்வி, செல்வம், புகழ், ஆரோக்கியம், பதவி, வணிகத்தில் லாபம், நிறைவான வாழ்வு என அனைத்தும் பெறலாம் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !