திருக்கடவூர் அபிராமி - கால பீடம்
ADDED :3660 days ago
16 வயதே ஆயுள் கொண்ட மார்கண்டேயனின் உயிரை எமதர்மன் கவர வந்தபோது, அவன் இத்தல ஈசனைப் பணிய, சிவபெருமான் காலனைக் காலால் உதைத்து, மார்கண்டேயனுக்கு என்றும் 16 வயது என்று அருளிய தலம். இத்தல அன்னை அபிராமி தன் பக்தன் அபிராம பட்டருக்காக நிலவற்ற இரவில் தன் காதணியை வானில் வீசி நிலவாகப் பிரகாசிக்கச் செய்து அருள்புரிந்தவள்.