திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தண்டினி பீடம்
ADDED :3660 days ago
இதை ஞானபீடம் என்றும் கூறுவர். பஞ்சபூத சிவத்தலங்களில் இது நீர்த்தலம். இங்கே அம்பிகை சிவனைப் பூஜிப்பதால் சிவ -சக்தி திருமண வைபவம் நடைபெறுவதில்லை. நண்பகல் பூஜையின்போது அர்ச்சகர் சேலை கட்டிக்கொண்டு பூஜிப்பார். தேவியே பூஜிப்பதாக ஐதீகம். லலிதா பரமேஸ்வரியின் சேனாதிபதி வாராஹி தேவியின் சக்கரம் பதிக்கப்பட்டிருப்பதால், இத்தலம் வாராஹி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் இங்கு வந்தபோது தேவி உக்ரமாக இருந்ததால், காதில் சிவ ஸ்ரீசக்கர தாடங்கம் பொருத்தி, எதிரே கணபதியையும் ஸ்தாபித்தார். அன்னை அகிலாண்டேஸ்வரி ஏதுமறியாப் பேதையின் வாயில் தன் தாம்பூல எச்சிலை உமிழ, அந்தப் பேதை காளமேகப் புலவனானான்.