மதுரை மீனாட்சி - மந்த்ரிணி பீடம்
ADDED :3660 days ago
இதை மனோன்மணி பீடம் என்றும் சொல்வர். லலிதா பரமேஸ்வரியின் மந்திரியாக விளங்குபவள் ராஜ மாதங்கி, அந்த தேவியின் சக்கரம் இங்கு பதிக்கப்பட்டிருக்கலாம். பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க அக்னி குண்டத்தில் தோன்றியவள் மீனாட்சி. ராணியாகப் பட்டமேற்று, பல மன்னர்களையும் வென்றாள். கயிலையில் சிவபெருமானுடனும் போர்புரியச் சென்று, பின்னர் அவரே மணாளன் என்றறிந்தாள். சிவன் சோமசுந்தரராய் வந்து மீனாட்சியை மணந்தார். இங்கு தேவிக்கே எதிலும் முன்னுரிமை. முதல் நிவேதனம் மீனாட்சிக்கே.