அகத்தீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா
ADDED :3297 days ago
பொன்னேரி: பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவிலில், சிவசுப்ரமணிய சுவாமிக்கு, 90ம் ஆண்டு கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா சிறப்பாக நடைபெற்றது. பொன்னேரி, ஆனந்தவல்லி அம்மை வலம் கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி உள்ளது. ஆண்டுதோறும் கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 90ம் ஆண்டு கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா நேற்று முன்தினம் துவங்கியது. ஆறு நாள் நடைபெறும் இவ்விழாவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் இருந்த உற்சவருக்கு, தீபாராதனைகள் நடந்தன. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருக பெருமானை வழிபட்டு சென்றனர். கந்தசஷ்டி விழா முடிந்து, இம்மாதம், 8ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு, தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறுகிறது.