பழநி கந்தசஷ்டி விழா: சிறப்பு அலங்காரத்தில் சுவாமி!
ADDED :3295 days ago
பழநி : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரசித்திபெற்ற கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கந்தசஷ்டி விழா மூன்றாவது நாளை முன்னிட்டு அலங்காரத்தில், பழநி மலைக்கோயில் சின்னக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா ஒருவாரகாலம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுவருகிறது. 5ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. தொடர்ந்து 6ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.