உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

வால்பாறை மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

வால்பாறை: ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன் கோவிலில் நடந்த, கும்பாபிேஷகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வால்பாறை ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மாடசாமி, முனுசாமி ஆகிய காவல் தெய்வங்களும், நவக்கிரகங்களுக்கு தனி கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தொடர்ந்து ஒரு வாரம் கோவில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலின் மகாகும்பாபிேஷக விழா நேற்று காலை கணபதிேஹாமத்துடன் துவங்கியது.  பல்வேறு சிறப்பு பூஜைக்கு பின்னர், பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசம் ஏந்தி கோவிலை வலம் வந்தனர். காலை, 9:30 மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது. சோலையார் குரூப் டீ எஸ்டேட் பொதுமேலாளர் சதாசிவம் தலைமையில் நடந்த இவ்விழாவில், கல்லார் எஸ்டேட் மேலாளர் பரிதோஷ், ஈட்டியார் எஸ்டேட் மேலாளர் செல்வின், கள அலுவலர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் இடம்பெற்றன. மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !