உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலம்!

ராமநாதபுரம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலம்!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, பெருவயல் ரணபலி, குயவன்குடி சாது சுப்பையா, மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம சக்திவடிவேல் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு வெற்றி வேல் வழங்கும் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினமும் மாலை அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, வீதியுலா, இரவு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நவ., 5ல் சூரசம்ஹாரம்,6ல் திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !