உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றம் லட்ச தீப சிறப்பு மலர் வினியோகம்

திருக்கழுக்குன்றம் லட்ச தீப சிறப்பு மலர் வினியோகம்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் லட்ச தீப சிறப்பு மலர் வினியோகிக்கப்படுகிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடை பெறும் சங்குதீர்த்த புஷ்கரமேளா மற்றும் லட்ச தீப பெருவிழா கடந்த ஆகஸ்ட், 2ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள், கோவிலை பற்றிய சிறப்புகள், பல துறை சார்ந்தவர்களின் வாழ்த்துக்கள் விளம்பரங்கள் உள்ளிட்டவை லட்ச தீப சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகம் அச்சடிக்கப்பட்டு தற்போது வினியோகிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !