சேலம் பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ விழா
ADDED :3296 days ago
சேலம்: கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில், நேற்று, பவித்ர உற்சவ விழா கொண்டாடப்பட்டது. சேலம், கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில், ஐப்பசியில், பவித்ர உற்சவம் நடக்கும். அதன்படி, கடந்த, 31ல் விழா துவங்கியது. தினசரி, சிறப்பு அபி ?ஷக ஆராதனை மற்றும் யாகம் நடந்தது. கடைசி நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு, அழகிரிநாதருக்கு, அதிகாலை பூஜை நடந்தது. பின், சிறப்பு அபி?ஷகம் செய்து, பவித்ர மாலை அணிவிக்கப்பட்டது. மாலை, 6:00 மணி வரை, சிறப்பு யாகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.