உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகிரியில் கந்தசஷ்டி விழா துவக்கம்

சிவகிரியில் கந்தசஷ்டி விழா துவக்கம்

கொடுமுடி: கொடுமுடி பகுதியில் உள்ள, முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. கொடுமுடி, மகுடேஸ்வரர் கோவில் மற்றும் சிவகிரி வேலாயுத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருவிழா கடந்த, 31ல் ஹோமத்துடன் துவங்கியது. தினமும் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு யாகம், அர்ச்சனை தீபாராதனை நடந்து வருகிறது. வரும், 5ல் கணபதி ஹோமம் நடக்கிறது. மேலும், 108 பால்குட திருவீதி உலா வந்து திருவிளக்கு வழிபாடு நடந்து, மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது. வரும், 6ல் அதிகாலை, 5:00 மணிக்கு வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, லிங்க கவுண்டன் வலசு கட்டளைதாரர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !