வேலாயுத சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3295 days ago
ஈரோடு: கந்த சஷ்டி விழாயொட்டி, திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. கந்த சஷ்டி விழா கடந்த, அக்., 31ல் துவங்கியது. இதையடுத்து, அனைத்து முருகன் கோவில்களிலும், சிறப்பு பூஜைகள், அபிஷேகம், வழிபாடுகள் நடக்கின்றன. ஈரோடு, திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், கணபதி ஹோமம், யாக பூஜையுடன், 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. சிவாச்சாரியார்கள், காவிரியில் இருந்து, கலசங்களில் கொண்டு வந்த நீரை, வலம்புரி சங்குகளில் நிரப்பி, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். அதை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மறுநாள், மாலை நடக்கிறது. தொடர்ந்து, 6ல், திருக்கல்யாணம் நடக்கிறது.