மூல நட்சத்திரத்தை முன்னிட்டு பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் பால் அபிஷேகம்
ADDED :3291 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு நவ.,4 பால் அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரியில்– திண்டிவனம் மெயின் ரோடு பஞ்வடீயில் அமைந்துள்ள 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், ஒவ்வொரு மாதமும், மூலநட்சத்திர தினத்தன்று சிறப்பு பால் அபிஷேகம் நடைபெறும். இந்த மாத மூலநட்சத்திர தினமான நவ.,4 நடைபெறும் பால் அபிஷேகத்துடன், ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் பால் அபிஷேகமும் சேர்த்து நடந்தது. மூலவர் ஆஞ்ஜநேயருக்கு பால், பன்னீர், மஞ்சள் ஆகிய மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்ப்டடு மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்திருந்தனர்.