உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெற்குணத்தில் கேட்பாரற்று கிடக்கும் தொன்மையான தீர்த்தங்கரர் சிலை

நெற்குணத்தில் கேட்பாரற்று கிடக்கும் தொன்மையான தீர்த்தங்கரர் சிலை

தொழுப்பேடு: தொழுப்பேடு அடுத்த நெற்குணம் கிராமத்தில், பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த தீர்த்தங்கரர் உருவச் சிலை கவனிப்பாரின்றிமரத்தடியில் கிடக்கிறது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுப்பாக்கம் அடுத்து உள்ளது தொழுப்பேடு. இங்கிருந்து இடதுபுறம், 8 கி.மீ.,யில் நெற்குணம் கிராமம் உள்ளது. இங்கு ஒரு புளிய மரத்தின் கீழ், 1,000 ஆண்டுகள் பழமையான சமண தீர்த்தங்கரர் சிலை, கவனிப்பாரின்றி கிடக்கிறது. இரு கைகளையும் இணைத்து தவக் கோலத்தில் அமைதியான முகத்தோடு இச்சிலை உள்ளது. திருவுருவச் சிலையின் தலைப்பகுதியில் பிரபாவளி எனப்படும் அரைவட்ட ஒளியும், நற்காட்சி, நல்லொழுக்கம், நல்லறிவு என்பவைகளைக் குறிக்கும் முக்குடை என்ற அமைப்பும் காணப்படுகிறது.பிண்டி மரத்தின் கீழ் உள்ளதாகக் காணப்படும் இச்சிலையில் இருபுறமும், கணதரர்கள் மற்றும் சாமரதாரர்கள் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதுபோன்று இந்த ஊரின் பல பகுதிகளில் பழைமை வாய்ந்த நந்தி போன்ற சிலைகளும், ஆங்காங்கே கவனிப்பாரின்றிகிடக்கின்றன. அரிய பொக்கிஷங்களான இந்தச் சிலைகளை உரிய முறையில் பராமரித்து, சமூக விரோதிகளின் கைகளில் சிக்காமல் கண்காணிப்பது அவசியம் என்கின்றனர் தொல்லியல் ஆர்வலர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !