உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் நவ.,5 சூரசம்ஹாரம்

திருப்போரூரில் நவ.,5 சூரசம்ஹாரம்

திருப்போரூர்: திருப்போரூரில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, நவ.,5 மாலை வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.

திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், 31ல் கொடியேற்றத்துடன் துவங்கிய கந்த சஷ்டி விழா, தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா, நவ.,5 மாலை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. காலை லட்ச்சார்ச்சனை முடிந்து, கந்தசுவாமி பெருமான் சரவணப் பொய்கை குளத்திற்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளுவார். பின், யாகசாலை கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மூலவர் கந்தசுவாமி பெருமானுக்கு, மகா அபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, சூரசம்ஹார பெருவிழா நடைபெறும். இதில், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடுகளும், சில கோவில்களில் சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது. ஆறு நாட்கள் விரதமிருந்த பக்தர்கள், நவ.,5 விரதத்தை நிறைவு செய்கின்றனர்; நவ.,6, பல கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !