தங்க கவசத்தில் வெள்ளாத்தூரம்மன்
ஆர்.கே.பேட்டை: வெள்ளிக்கிழமை பூஜையில், வெள்ளாத்துாரம்மன் நாக கிரீடத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது வெள்ளாத்துாரம்மன் கோவில். இந்த கோவிலுக்கு, வங்கனுார், பொதட்டூர்பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் நகரி, புதுப்பேட்டை, சத்திர வாடா, நாராயணவனம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நவ.,4 வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை மற்றும் நித்திய பூஜையில், பொதட்டூர்பேட்டை மற்றும் சிந்தலபட்டடை கிராமத்தினர் முன்னின்று நடத்தினர். காலை, 10:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, மஞ்சள், குங்குமம், பால், நெய், பழம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, அம்மனுக்கு தங்க காப்பு மற்றும் நாக கிரீடம் அணிவிக்கப்பட்டது. கற்பூர ஜோதியில், அம்மன் தங்கமயமாக, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.