மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு
ADDED :3297 days ago
திருவண்ணாமலை: ஆரணி அருகே, மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே களம்பூர் பகுதியில் 100 ஏக்கரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி பாசனத்தை நம்பி, 10ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது இந்த ஏரியில் நீர் வரண்டு காணப்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை வேண்டி, பெரிய ஏரி கரையில் கிராம மக்கள் நேற்று மாலை, 3:00 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மேலும் முதியோர், பெண்கள், விதவைகள் என, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பாரி வைத்து அழுது, வருண பகவானுக்கு நூதன முறையில் வழிபாடு நடத்தி, மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.