உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 14ல் அன்னாபிஷேகம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 14ல் அன்னாபிஷேகம்

திருவாலங்காடு : திருவாலங்காடு, வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், வரும், 14ம் தேதி, அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. திருவாலங்காடு, வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், வரும், 14ம் தேதி ஐப்பசி பவுர்ணமி திதியையொட்டி, அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதே போல், திருத்தணி நகரில் உள்ள வீரட்டீஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில், தாடூர் கடலீஸ்வரர் கோவில், அகூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில், அருங்குளம் அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் உட்பட தாலுகாவில் உள்ள அனைத்து கோவில்களில் அன்னாபிஷேகம் வரும், 14ம் தேதி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !