உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி கோவிலில் ஒரே நாளில் 75 திருமணங்கள்

பவானி கோவிலில் ஒரே நாளில் 75 திருமணங்கள்

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், ஐப்பசி வளர்பிறை முகூர்த்த தினமான நேற்று, 75 திருமணங்கள் நடந்தன. ஈரோடு மாவட்ட கோவில்களிலில், மிகவும் பிரசித்தி பெற்றது, பவானியில் உள்ள வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் ஆகும். இந்த கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை முகூர்த்த தினமான நேற்று, கூடுதுறை பகுதி மற்றும் சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகியம்மன் சன்னதி, பெருமாள் கோவில் சன்னதி, நரசிம்மர்கோவில் சன்னதி, தாயார் கோவில் சன்னதி என பல இடங்களில், 75 திருமணங்கள் நடந்ததாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !